Header Ads

test

கொள்ளயடிக்கப்போன இடத்தில் கொலைகாரனாக மாறிய திருடன் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

 பிட்டுவல்கொட பகுதியில் வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளைக்காரர்கள் இரு பெண்களை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று (09) அதிகாலை ல்வத்து ஹிரிபிட்டிய, பிட்டுவல்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளைக்காரர்கள், வீட்டில் இருந்த பெண்களை தாக்கி கை, கால்களை கட்டி வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண்ணை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments