சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.
கிரான்பாஸ், கஜீமா தோட்ட பகுதியில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சகோதர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட பணப்பிரச்னையில் மூத்த சகோதரன் தனது சொந்த தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் 26 வயது இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் கொலை செய்த 28 வயது சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment