Header Ads

test

ரஷ்யாவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி.

 ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அங்கு இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

2020ம் ஆண்டு இலங்கைக்கான தனது விஜயத்தின் போது ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ரஷ்ய குடியரசின் நடவடிக்கைகளின் பிரதானியான ஜெனரல் ஒலெக் சல்யுகோவ், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் கோவிட் 19 பரவல் காரணமாக இலங்கை இராணுவத் தளபதியின் ரஷ்யாவிற்கான பதில் விஜயம் கால வரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடந்த 25ம் திகதி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, ​​இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான பயிற்சித் திட்டங்களை ஊக்குவித்தல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இயந்திரவியல் மற்றும் பொறியியல் அறிவைப் பரிமாறிக்கொள்வது உட்பட பரஸ்பர விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்நிலையில், இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



No comments