மருமகனின் தாக்குதலில் மாமியார் மருத்துவமனையில்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மருமகனின் செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு புத்திமதி கூறிய மாமியாரை கடுமையான முறையில் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இத்தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் கட்டட தேவைக்காக வைக்கப்பட்டிருந்த சீமெந்து பக்கெற்களை மருமகன் சேதப்படுத்தியுள்ளார். இதனை கண்ட மாமியார் கேள்வி எழுப்பியபோது ஆத்திரமடைந்த மருமகன் மாமியாரை கடுமையாக தாக்கியுள்ளார்.
அவரின் தாக்குதலில் தலைப்பகுதியில் காயமடைந்த மாமியார் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment