இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் மரணம்.
கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய மிலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளராக செயற்பட்டுள்ளார்.
தற்போது இத்தாலியில் வசிக்கும் சமிந்த என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment