நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதி நவீன சொகுசு வாகனங்கள்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தரையிறங்கிய குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமா இல்லையா என இலங்கை சுங்க திணைக்களம் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்த நிலையில் குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தற்போது அவ் வாகனங்கள் சட்டத்திற்கு முரணாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த வாகனங்களில் பெரும்பாலானவை ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இருந்து உரிம முறையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
Post a Comment