Header Ads

test

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை.

  யாழ்ப்பாணம் - வடமராட்சி, கப்புது வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர், தனது தாயாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன்போது மோட்டார் சைக்கிள், பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிஞ்கையையும் தாண்டி பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வருகின்றது.


No comments