பகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலர் இறந்திருக்கலாமென அச்சம்.
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
Post a Comment