மட்டக்களப்பில் சதிகாரரின் நாசகாரச் செயலால் எரிந்து நாசமாகிய முச்சக்கரவண்டி.
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க குறுக்கு வீதி மீராவேடையில் உள்ள எம்.எல்.எம். நிப்ராஸ் என்பருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருக்கும் அனைவரும் உறங்கி கொண்டிருந்தவேளை வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த சத்தம் கேட்டதாகவும், கதவினை திறந்து பார்த்த போது தமது முச்சக்கர வண்டி தீயில் எரிந்து கொண்டிருப்பதனை கண்டு அயலவர்களை அழைத்து தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டேன் எனவும் தெரிவித்தார்.
நாளாந்தம் முச்சக்கரவண்டியின் மூலம் உழைக்கும் பணத்தினை கொண்டே லீசிங் நிறுவனத்திற்கு கடன் செலுத்தி வந்ததாக தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியினை தீயிட்டு கொழுத்தியவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வீட்டுச் சுவரில் அனாமதேய கடிதத்தினை ஒட்டிவிட்டு சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு தடயவியல் காவல்துறை சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
Post a Comment