கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் நபர் ஒருவர் மீது சரமாரியான தாக்குதல்.
கிளிநொச்சி முகமாலையில் நபர் ஒருவர்மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனால் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு 07.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் முகமாலை வடக்கை சேர்ந்த தனபாலசிங்கம் விஜயகாந்த் (47) என்பவரே காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் பளை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முகமாலை பகுதியில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயற்பாடுகள், களவுகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment