Header Ads

test

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது.

 இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மூன்றுடன் ஐவரை இறக்குவானைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இறக்குவானை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக முச்சக்கரவண்டியொன்றை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட  நால்வரைக் கைதுசெய்தனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கித் தோட்டாக்களை விலைக்கு வாங்கியுள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து துப்பாக்கி, தோட்டாக்களை விற்பனை செய்த நபரையும் பொலிஸார் கைதுசெய்தனர். கஹவத்த, அட்டகலன்பன்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 30, 65, 39, 49 வயதுகளையுடைய ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


No comments