கொழும்பு நகர்ப்பகுதியில் மீட்கப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட பரபரப்பு.
கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான விகாரை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றுமொரு இடத்திலிருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கியின் 205 தோட்டாக்கள் நேற்று சிறிலங்கா காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு - புறகோட்டை, பிரிஸ்டல் வீதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடம் ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட பொருளாதார மையங்கள் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற தோட்டாக்கள் கண்டுபிடிப்பது பாதுகாப்பு பிரச்சினை என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment