Header Ads

test

மட்டக்களப்பில் நபர் ஒருவருக்கு மைத்துனரால் நேர்ந்த துயரம்.

 கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாததில் மனைவியின் சகோதரானால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காத்தன்குடியை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

மட்டக்களப்பில் கணவன் மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாததில் மனைவியின் சகோதரன் அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த கணவன் மட்டக்களப்பு வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபரான மனைவியின் சகோதரனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  


No comments