Header Ads

test

வவுனியாவில் காணமல் போன மாணவன் புதுக்குடியிருப்பில் மீட்பு.

 வவுனியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட 17 வயது மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மணிவண்ணன் சிவானுஜன் என்ற 17 வயது மாணவனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் நேற்று முன்தினம் (07) காலை கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணவில்லை என மாணவனின் தந்தையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மாணவன் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பேரூந்து நிலையத்தில் நிற்பதாக மாணவனின் நண்பனுக்கு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மூலம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதேவேளை குறித்த மாணவன் வீட்டில் இருந்து முரண்பட்டுக் கொண்டு வந்துள்ளதாக அறிந்த முச்சக்கரவண்டி சாரதி, மாணவனை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் சம்பவம்  தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசாரினால் மேற்கொள்ள விசாரணைகளையடுத்து மாணவனை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.


No comments