நீதிபதி சென்ற வாகனத்திற்கு கை காட்டிய குற்றத்திற்காக மூவர் கைது.
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி சென்ற காரினைக் கைகாட்டி தகாத வார்த்தைப் பிரயோகம் செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவமானது இன்று மாலை வடமராட்சி குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி தனது காரில் யாழ் - பருத்தித்துறை வீதியில் பயணித்துள்ளார்.
அந்த சமயத்தில் முச்சக்கர வாகனத்தில் பயணித்த மூவர், நீதிபதி சென்ற வாகனத்தை நோக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் குறித்த பகுதியிலிருந்த வீதி தடை அருகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment