திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, தாயை காப்பாற்ற சென்ற மகனுக்கும் தீப்பற்றிய நிலையில் தாயும், மகனும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த பெண் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் வசித்து வரும் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பெண் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான டபிள்யூ.ஏ.தமயந்தி வீரதுங்க (48 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே தனக்கு தானே தீயிட்டு கொண்டதாகவும், 17 வயதான மகன் தாயை காப்பாற்ற சென்ற நிலையில்,அவருக்கும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், தாயின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment