Header Ads

test

காணாமல் போயிருந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.

  கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுகாஸ்தோட்டை, மகாவலி கங்கையின் கிளை நதியான பிங்கா ஓயாவில் குறித்த இளைஞனின்ன சடலம் மிதந்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ரனவன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனின் சடலம் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கட்டுகாஸ்தோட்டைப் காவல்துறைக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் படி பிங்காஓயா ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் அது காணாமல் போன புத்திக ரனவக்க என்ற ரனவன பிரதேச இளைஞரது சடலம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கண்டி நகர திடீர் மரணவிசாரணை அதிகாரி பி.பீ.விஜேகோன் மேற் கொண்டார்.

நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். கட்டுகாஸ்தோட்டைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


No comments