Header Ads

test

வவுனியாவில் வீட்டிலிருந்தவர்களை தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்ற கும்பல்.

 வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என்பதும், வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனை காதலித்து கடந்த ஜூலை மாதத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

இந் நிலையில் நேற்று குறித்த பெண் மர்ம நபர்களால் வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து கணவன் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் போலீசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.      


No comments