கிராம சேவகர் கொலை தொடர்பில் புகையிரத பொறுப்பதிகாரி கைது.
அம்பன்பொல தெற்கு பிரிவின் கிராம உத்தியோத்தர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நேற்றையதினம் அம்பன்பொல பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் 51 வயதான எஸ்.எம்.கபில பிரியந்த சபுகுமார என்ற 3 பிள்ளைகளின் தந்தை குழுவொன்றினால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.
பிரதேச செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த கிராம உத்தியோகத்தர், வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் நிலத்தகராறு காரணமாக இடம்பெற்றதாகவும், பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
Post a Comment