Header Ads

test

பேஸ்புக் பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

 பேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் (Mark Zuckerberg) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களையும் தன்வசம் வைத்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் புதிய பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும், ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் ஒரு செயலியில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓகலஸ் உள்ளிட்டவைகள் கிடைக்கக் கூடும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.


No comments