தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த துயரம் - திருகோணமலையில் சம்பவம்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்தையை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா பைசல் நகர்ப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாய் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ள நிலையில், சிறுமி தாயின் தங்கையின் வீட்டில் வசித்து வந்த போது சிறுமியின் தந்தை மதுபோதையில் வருகை தந்து சிறுமியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரைக் கிண்ணியா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment