மட்டக்களப்பில் இன்று மாலை குடும்பஸ்த்தர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செங்கலடி கறுத்தப்பாலத்திற்கருகே இன்று மாலை காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
செங்கலடி கொடுவாமடு காளிகேயில் வீதியைச் சேர்ந்த குஞ்சித்தம்பி காலிக்குட்டி (63 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று பி.ப 04.00 மணியளவில் செங்கலடி கறுத்தப்பாலத்திற்கருகே மாடு மேய்ச்சலுக்கு காவலுக்கு செல்லும் போதே காட்டு யானை தாக்கியுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்தில் கூடிய பொது மக்கள் கோபம் அடைந்து தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு எதிராக தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இராஜாங்க அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் நாட்டின் அரச தலைவருக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாது எனவும் இங்குள்ள எம்.பி மார் பொய் கூறுகின்றனர் எனவும் குறித்த இடத்தில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணையையும் முன்னெடுத்தார்.
சடலம் தற்போது பிரேத பரிசேதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Post a Comment