வடமாகாண புதிய ஆளுநரின் அதிரடியான செயற்பாடுகள்.
வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளதுடன், சிறைச்சாலைக்கும் விஜயம் செய்துள்ளார்.
வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஜீவன் தியாகராஜா தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
அதன்படி யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் அவர் சந்தித்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதார தொண்டர்களையும் சந்தித்த அவர், யாழ்.சிறைச்சாலைக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment