வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் எல்ல சுற்றுலா மண்டலம்.
கொரோனா தொற்று பரவலால் இரு ஆண்டுகளாக செயற்படாமல் இருந்த எல்ல சுற்றுலாத் துறை இந்த நாட்களில் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் எல்ல சுற்றுலா மண்டலத்திற்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல சுற்றுலா மண்டலத்தில் உள்ள விடுதிகள் வெளிநாட்டினரால் நிரம்பியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
Post a Comment