Header Ads

test

ஆற்றங்கரையோரத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் ஏற்பட்டுள்ள பர பரப்பு.

 கொழும்பு - சேதவத்தை பகுதியின் களனி ஆற்றங்கரையில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படுபடும் பெண்கள், இவரின் விபரங்களுடனும் இந்த பெண்ணின் சடலம் பொருந்தவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் கூறியதாவது, குறித்த சடலமானது சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணாக இருக்குமென்றும், தலைமுடிக்கு சாயம் பூசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவரது முழங்காலில் கீறல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ள நிலையில், சடலத்தின் மீது நாணய தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.


No comments