குடும்பஸ்த்தரின் உயிரை பறித்த கோர விபத்து.
திருகோணமலை - தம்புள்ளை வீதியின், ஹிரிவடுன்ன பிரதேசத்தில் இன்று லொறியொன்று மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் படுகாயமடைந்து ஹபரண வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஹபரண பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Post a Comment