கிளிநொச்சியில் பொலிஸ் மற்றும் இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு.
கிளிநொச்சியில் பொலிஸ், இராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையின் போது பாதுகாப்புக் கடமைக்காக சென்ற பொலிஸார் மீது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் தர்மபுரம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் 04, வாள் 01, இடியன் துப்பாக்கி 01, சட்டவிரோத கசிப்பு 18 லீற்றர் மீட்கப்பட்டுள்ளதுடன் , கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment