Header Ads

test

சற்று முன் நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர்.

 இலங்கைக்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ வர்தன் ஸ்ரிங்லா,(Sri Harsha Vardhan Sringla) சற்று முன்னர்   கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்தார்.

இந்திய வெளிவிவகார செயலாளர், எதிர்வரும் 5ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் தனது விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை சந்திப்பார் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளராக ஶ்ரீ ஹர்ஷ வர்தன் ஸ்ரிங்லா, பதவியேற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


No comments