Header Ads

test

கிளிநொச்சி தர்மபுரத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.

 கிளிநொச்சி, தர்மபுரம் கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


No comments