Header Ads

test

பாம்புக் கடிக்கு இலக்கான சிறுவன் பாம்புடன் வைத்தியசாலை சென்ற அதிர்ச்சி சம்பவம்.

 யாழில் 15 வயது சிறுவன் ஒருவரை நாக பாம்பு கடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

15 வயதான குறித்த சிறுவன் நண்பர்களுடன் நுணாவில் பகுதியில்  உள்ள வயலுக்கு சென்றிருந்தபோது நாக பாம்பு கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுவனும் சிறுவனது நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments