காவல்துறை அவசர உதவிப்பிரிவிற்கு ஏற்படுத்தப்பட்ட தொலை பேசி அழைப்பால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அவசர உதவிப் பிரிவிற்க்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 ரவைகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அங்கு வசிப்பவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் கூறினர்.
பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment