மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை சற்று முன்னர் நீக்கம்.
கோவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே, பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை சுமார் 152 ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Post a Comment