பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்.
பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட923 பாடசாலைகளில் தரம் 01 முதல் ஐந்தாம் தரம் வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்கும் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு வழங்கப்படும் பாலுக்கு பதிலாக கஞ்சியை மாற்ற அமைச்சர் முன்மொழிந்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நாளைக்கு ரூ .23 ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Post a Comment