யாழில் மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம்.
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டமானது இன்று மதியம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையெழுத்து பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படுள்ளது.
கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினர் இலங்கையிலுள்ள அனைத்து மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment