தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் உயிரை விட்ட குழந்தை - யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.
தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில்,
நேற்று அதிகாலை 3மணியளவில் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பாலை குடித்த குழந்தை சில நிமிடங்களில் மயங்கிய நிலையில் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டபோதும் அதிகாலை 5.30 மணியளவில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
Post a Comment