உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.
ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் (2019 Sri Lanka Easter bombings) சம்பவம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இறந்துபோனவர்களை நினைவுகூரும் முகமாக உயிரிழந்தவர்களுக்கான விசேட ஆராதனை இன்று காலை நடைபெற்றது.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் (Malcolm Ranjith) தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) கருத்து தெரிவிக்கையில்,
அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தி யாராவது அதிகாரத்தை கைப்பற்றி இருந்தால், அவர்களுக்கு அந்த அதிகாரத்தை அனுபவிக்க கிடைக்காது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஞாயிறு தின குண்டுவெடிப்பிற்கு பின்னர் இலங்கை அந்த சாபத்தால் பாதிக்கப்படுவது போல் தோன்றுகிறது, ஏனெனில் ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டை நடத்துவது கடினமாக இருக்கும் போது எவரும் எதை வேண்டுமானாலும் மகிழ்ச்சியாக சம்பாதித்து வாழ முடியாது.
ஞாயிறு தின தாக்குதலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் நீண்ட காலம் ஆட்சியை அனுபவிக்க முடியாது. இன்று நாட்டை ஆள்பவர்களும் ஈஸ்டர் ஞாயிறு சதித்திட்டத்தின் பங்காளிகளா என்று நாம் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment