Header Ads

test

யாழில் நள்ளிரவில் கொள்ளை - சம்பவம் தொடர்பில் மூவர் கைது.

யாழில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்து பெருமதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையிட்டுட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று பேரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

 யாழ்.இணுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்து வீட்டில் இருந்தவர்களை கோடாரியை காட்டி அச்சுறுத்தி சுமார் 21 பவுண்ட் தங்க நகைகளை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட 13 பவுண் நகையுடன் சந்தேக நபர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

 தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளைக்கு உதவியவர் என 4 பேர் தற்போது பொலிஸாரின் விசாரணையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   


No comments