Header Ads

test

பொலிஸ் காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பால் கிளர்ந்தெழுந்த கிராமவாசிகள்.

காவல்துறையின் தடுப்பில் இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக தடுத்து வைத்து குறித்த இளைஞனை காவல்துறை தாக்கியதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கடுவலை காவல்துறையால் கடந்த 17 ஆம் திகதி குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நகை பறிப்பு சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய குறித்த இளைஞன் கடுவலை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி வெலிஹிந்த பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். 

No comments