முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவால் ஏற்பட்ட சோகம்.
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணீரூற்று கிழக்கு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 19 வயதுடைய பாணுகாந்த் என்ற இளைஞரே இவ்வாறு வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ வீட்டிற்கு விரைந்த முள்ளியவளை பொலிசாரும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Post a Comment