கிளிநொச்சியில் ஆசியாவின் அதிசயமாக மாறிக்கொண்டிருக்கும் காபெற் வீதி.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் முடியும் முன்னரே வீதி முற்றாக தேசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீதியால் சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் தற்போது காணப்படுவவதாகவும் பொது மக்கள் கூறியுள்ளனர்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வீதியானது பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கை்கு அமைவாக முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதேச மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமடைந்துள்ளதுடன், வீதியின் பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு அப் பகுதிகளும் சேதமடையும் நிலையில் உள்ளது.
இப் பகுதியால் மக்கள் தமது அன்றாட கடமைகளுக்கு செல்லமுடியாது அல்லற்படும் சூழலே ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment