வவுனியாவில் மொட்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு.
வவுனியாவில், பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டதனால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
2022 வரவு செலவுத்திட்டத்தில் கிராமங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கிராம மட்ட செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்றது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட பிரமுகர்களுடன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிலையில் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, ஜாதிக நிதஸ் பெரமுன கட்சியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை உறுப்பினர் எஸ். எம். ஜே. தர்மகீர்த்தி மற்றும் மகஜன எக்சத் பெரமுன கட்சியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை உறுப்பினர் சம்பத் பியதுங்க ஆகியோர் கூட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று தமக்கு கூட்டம் இடம்பெறுவது தொடர்பில் அறிவிக்கவில்லை என தர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
Post a Comment