திருகோணமலையை உலுக்கிய மாணவியின் கொலை.
திருகோணமலையில் 17 வயது மாணவி ஏரியூட்டப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் திருகோணமலை ஆலங்கேணி பகுதியில் 10.04.2021 அன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 17 வயதான கேதீஸ்வரன் சாமினி என்னும் மாணவி ஏரியுட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மாணவி ஏரியூட்டப்பட்ட அன்று கிண்ணியா தள வைத்தியாசலையில் அனிமதிக்கபட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவி 25.04.2021 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இதன்போது எரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த மாணவி மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அக்கிராமத்தை சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்களை கிண்ணியா பொலிஸார் கைது செய்து விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை பச்சைநிற கிண்ணத்தில் எடுத்து உருத்திரமூர்த்தி அருள் ஊற்றிய நிலையில் தேவராஜா கபில்ராஜ் தீ வைத்ததை ஓப்புக்கொண்டுள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் 25ஆம் திகதி இடம்பெற்று இருந்தது. பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று (14) எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment