Header Ads

test

ஒன்றரை மாதக் குழந்தைக்கு யமனாக மாறிய தாய் - நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.

 அனுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத குழந்தையை இளம் தாய் ஒருவர் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட - ஷ்ரவஸ்திபுர பகுதியில்  நடந்தேறியுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த தாய் வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கோடாரியால் குழந்தையை வெட்டிக் கொடூரமாக கொலை செய்துவிட்டு குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிசார் கைது செய்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தாய் விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments