இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும்(Harsh Vardhan Shringla) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் தீர்வு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்யை தினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே(Gopal Baglay), யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்(Raakesh Natraj Jeyabaskaran) ஆகியோரும் உடனிருந்தனர்.
இச்சந்திப்பில்,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்(B.S.M. Charles),வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்(C.V.K.Sivagnanam) நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnampalam), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்(M.K.Sivajilingam), சுரேஸ் பிரேமச்சந்திரன்(Suresh premachandran), யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்(V.Manivannan), உட்பட அரசியல் பிரமுகர்களும்,கல்வித்துறை சார்ந்தவர்கள்,வர்த்தகதுறை பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகிய சிலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment