திருமலைக்கு திடீர் விஜயம் மேற்க்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிரிங்லா(Harsh Vardhan Shringla) திருகோணமலையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று (03) காலை விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்திய அரசுடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய செயற்திட்டங்கள் குறித்து பார்வையிடுவதற்காக திருகோணமலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு சென்று தாங்கிகளையும் பார்வையிட்டார்.
சீனக்குடா விமான நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்க்குள் செல்வதற்காக இரு பக்க வீதிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் சீனக் குடாவில் உள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தையும், தாங்கிகளையும் பார்வையிட்டார்.
அத்துடன் இன்று மாலை இந்திய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ். கலாச்சார மண்டபத்தை பார்வையிட செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு நேற்று சனிக்கிழமை சில அமைச்சர்கள் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் செயலாளருடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர்கள் சிலர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் எவரும் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயம் தொடர்பில் கடந்த காலங்களில் இந்திய தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படாவிட்டாலும் இந்த விஜயம் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment