புலம் பெயர் மக்களுடன் பேச்சு நடாத்த ஜனாதிபதி பணிப்புரை.
புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஊக்குவித்துள்ளதாகவும், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அணுகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிவில் சமூக அமைப்புகளுடனும் அரசாங்கம் ஈடுபாட்டை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில சந்தேக நபர்களையும் அரசாங்கம் விடுவித்துள்ளதுடன், அதிலும் தற்போது கணிசமான மாற்றங்களைச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற அலுவலகங்கள் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் எலிசபெத் ட்ரஸ்ஸை(Elizabeth Truss) வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் சந்தித்த போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
Post a Comment