பயணக்கட்டுப்பாடு மீண்டும் தொடருமா - வெளிவந்த புதிய தகவல்.
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால், பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)தெரிவித்துள்ளார்.
மக்கள் மிகவும் கவனமாக செயற்படாவிட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றும், நாடு முழுவதும் 15 ஆம் திகதி திறக்க முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு மக்களை கடுமையாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்கள்.
Post a Comment