Header Ads

test

தன் உயிரை பணயம்வைத்து மாணவனை காப்பாற்றிய நல் உள்ளம்.

 மருதமுனை கடலில் குளிக்கச்சென்ற மாணவர்களில் ஒருவர் வீதியால் சென்றவரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மருதமுனைக் கடற்கரையில் நண்பர்கள் குழு ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் அனைவரும் கடலில் குளிக்க சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அதில் ஒரு மாணவன் நீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏனைய நண்பர்கள் உதவிகேட்டு கூக்குரலிட்டுள்ளனர். இந்த சம்பவமானது நேற்று மலை 05.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்த சமயத்தில் அவ்வீதியால் சென்ற ஐ.சாபி சமீம் என்ற நபர் தனது குழந்தையுடன் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மாணவர்களின் குரலக்கேட்டு தனது குழந்தையை வீதியில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு உதவிக்கு சென்றுள்ளார். தனது உயிரை பணயமாக வைத்து கடலில் சிக்கிய மாணவனை மீட்டுக் கரை சேர்த்தார்.

இவரது இந்த துணிச்சலான செயலால் மாணவனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டுள்ளார். இவரது இந்த செயலுக்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது.   


No comments