வாகன பிரியர்களுக்கு கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான செய்தி.
வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களைக் கொண்டு வர மத்திய வங்கி நிவாரணம் வழங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்குள் வாகனத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான வரிகளை டொலரில் செலுத்த அனுமதிப்பது குறித்துக் கலந்துரை யாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தான் முன்வைத்த யோசனைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலாவத்த தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்தை அமுல்படுத்திய பின்னர் நாட்டில் வாகனங்களின் விலை குறையும் என்றும் நாட்டின் டொலர் பிரச்சினையும் தீர்க்கப்படும் என்றும் பிரேமநாத் தொலாவத்த தெரிவித்துள்ளார்.
Post a Comment