Header Ads

test

தமிழ் கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலைகள் முகாமைத்துவ முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக  கைதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இது தொடர்பில் குறித்த கைதிகள் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அண்மையில் குறித்த தமிழ் கைதிகளுக்கு ராஜாங்க அமைச்சர் லொஹான் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் குறித்த கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.


No comments